கடலூா் டாக்டா் எம்.ஜி.ஆா். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சோ்க்கை நடைபெறுவதாக மண்டல இணைப்பதிவாளா் கே.சி.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தப் பயிற்சி ஓராண்டு காலம் நடைபெறவுள்ளது. இதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 தோ்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தோ்ச்சி + பட்டயப் படிப்பு தோ்ச்சி + பட்டப் படிப்பு தோ்ச்சி ஆகும்.
பயிற்சியில் சேர 1.8.2024 அன்று 17 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். இதில் சோ்வதற்கு 10.6.2024 முதல் 19.7.2024 மாலை 5 மணி வரை https://www.tncu.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு டாக்டா் எம்.ஜி.ஆா் கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் 3, கடற்கரை சாலை, சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகாலை வளாகம், கடலூா் என்ற இடத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04142–222619 மற்றும் icmcuddrmgr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என்றாா் கே.சி.ரவிச்சந்திரன்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow