Home Blog கூட்டுறவு பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

கூட்டுறவு பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

0

கூட்டுறவு பட்டய பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை துவங்கியது.மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி செய்திக்குறிப்பு:

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழி www.tncuicm.com மூலம் நேற்று முன்தினம் முதல் வரும் 22ம் தேதி வரை பெறப்படுகிறது.

அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.குறைந்தபட்சம் கல்வித் தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில்லை. கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி முழு நேரமாக அளிக்கப்படுகிறது. 

இந்த பயிற்சி ஓராண்டு வரை 2 பருவ முறைகளாகவும், இதற்கு கட்டணம் 18 ஆயிரத்து 850 ரூபாய் ஆகும்.மேலும், தகவல் பெற விரும்புவோர் www.tncuicm.com அல்லது கூடுதல் விபரங்களுக்கு மேலாண்மை நிலைய முதல்வர் (பொறுப்பு) மொபைல் 8825928327 மற்றும் அலுவலக தொலை பேசி எண் 04146 259467 மூலம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version