TAMIL MIXER EDUCATION.ன்
காவலா் பணி தேர்வுசெய்திகள்
காவலா் பணி
தேர்வுக்கான விழிப்புணா்வு நிகழ்வு
இதுகுறித்து தஞ்சாவூர் ஆட்சியா் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு
சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால் காவல் துறையில் காலியாகவுள்ள 3,552 இரண்டாம் நிலைக்
காவலா், இரண்டாம் நிலை
சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான
கல்வித்தகுதி 10ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இத்தேர்வுக்கு ஆகஸ்ட்
8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
தன்னார்வப் பயிலும் வட்டத்தின் சார்பில், இத்தேர்வுக்கான விழிப்புணா்வு நிகழ்வு ஜூலை 19ம்
தேதி காலை 10.30 மணிக்குத்
தொடங்கி நடத்தப்படவுள்ளது.
தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும்
தேர்வுக்குத் தயார்
செய்யும் விதம், பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க
வகுப்பு நடைபெறும். மேலும்
தொடா்ந்து பயிற்சி வகுப்புகளும் இலவசமாக நடைபெறும்.
பயிற்சி
வகுப்பு அனுபவமிக்க சிறப்பு
வல்லுநா்களைக் கொண்டு
நடத்தப்படுவதுடன், பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித்
தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
தஞ்சாவூா்
மாவட்டத்தைச் சோந்த
காவல் துறைப் பணிக்குத்
தயாராகும் இளைஞா்கள் தங்களது
பெயா் மற்றும் கல்வித்
தகுதியைக் குறிப்பிட்டு 8110919990
என்ற வாட்ஸ் ஆப்
எண்ணில் தகவல் அனுப்பி,
தங்களது பெயரைப் பதிவு
செய்து கொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு 04362 237037
என்ற எண்ணில் தொடா்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here