Sunday, August 10, 2025
HomeBlogதமிழகத்தில் கணினி உதவியாளர் பணி – ஓராண்டு காலம் நீட்டிப்பு

தமிழகத்தில் கணினி உதவியாளர் பணி – ஓராண்டு காலம் நீட்டிப்பு

 

தமிழகத்தில் கணினி
உதவியாளர் பணிஓராண்டு
காலம் நீட்டிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் சத்துணவு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த சத்துணவு
திட்டத்தில் சத்துணவு கணக்கு
விபரங்கள், சத்துணவு பணியாளர்களின் ஊதியப்பட்டியல் போன்ற
அனைத்து தகவல்களையும் கணினியில்
பதிவேற்றம் செய்யும் பணியில்
உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி
சத்துணவு திட்டத்தின் ஒவ்வொரு
ஒன்றியத்திலும் கணினி
உதவியாளர்கள் பணியில்
அமர்த்தப்பட்டிருந்தனர். முன்னதாக
இந்த கணினி உதவியாளர்கள் பணிக்காலம் ஒரு ஆண்டாக
இருந்து வந்தது. தற்போது
கணினி உதவியாளர்களின் பணிக்காலம் மேலும் ஒரு ஆண்டு
நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம்
31
ஆம் தேதியுடன் இவர்களது
ஒரு ஆண்டு பதவிக்காலம் முடிவு பெற்றது. தற்போது
இந்த கணினி உதவியாளர்
பதவிக்காலத்தை மேலும்
ஒரு ஆண்டு உயர்த்தி
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூடுதலாக
தற்போது பணி நீட்டிப்பு செய்யப்பட்ட கணினி உதவியாளர்கள் வரும் 2022-ஆம் ஆண்டு
வரை பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments