Thursday, August 14, 2025
HomeBlogகணினி அறிவியல் தேர்வு முறைகேடு தொடர்பாக புகார்களை மார்ச் 1க்குள் அனுப்ப வேண்டும்

கணினி அறிவியல் தேர்வு முறைகேடு தொடர்பாக புகார்களை மார்ச் 1க்குள் அனுப்ப வேண்டும்

 

கணினி அறிவியல்
தேர்வு முறைகேடு தொடர்பாக புகார்களை மார்ச் 1க்குள் அனுப்ப
வேண்டும்

கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அரசு
பள்ளிகளில் காலியாக உள்ள,
814
கணினி பயிற்றுனர் இடங்களை
நிரப்ப, 2019 ஜூனில் தேர்வு
நடந்தது. மாநிலம் முழுதும்
பல மையங்களில் நடந்த,
இந்த தேர்வில் முறைகேடு
நடந்துள்ளதாக, புகார்
எழுந்துள்ளது.இதுகுறித்த வழக்கில், சென்னை உயர்
நீதிமன்ற உத்தரவுப்படி, இரு
நபர் கமிட்டி விசாரணை
துவங்கியுள்ளது.

இந்த
தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள், தங்களுக்கு தேர்வு தொடர்பான
குறைகள் மற்றும் புகார்கள்
இருந்தால், மார்ச் 1 மாலை,
5
மணிக்குள், trbtwomemberscommittee@gmail.com
என்ற மெயிலில்
அனுப்பலாம்.

அதன்
பிரதிகளை, சென்னையில், பள்ளிக்கல்வி வளாகத்தில் செயல்படும் இரு
நபர் கமிட்டிக்கு தபாலில்
அனுப்ப வேண்டும். புகார்
தெரிவிப்பவர் கமிட்டி
அழைக்கும் போது, விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments