ரூ.1,000 உதவித்தொகையுடன் கூடிய போட்டி தேர்வு
பயிற்சி வகுப்பு
ஆதி
திராவிடர் மற்றும் பழங்குடி
இனத்தவர்களுக்கான தேசிய
வாழ்வாதார சேவை மையமானது
இந்திய அரசு, தொழிலாளர்
மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
– DGE, ஆல் தமிழ்நாடு நிறுவப்பட்டு, படித்த வேலையற்ற SC/ST சமூகத்தை
சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு
தொழில் வழிகாட்டுதல்/ தன்னம்பிக்கை ஏற்படுத்துதல் மற்றும்
போட்டித்தேர்வு பயிற்சிகளை அளித்து வருகிறது.
புதுச்சேரியில் முதன்முறையாக 11 மாத
கால அரசு வேலை
வாய்ப்பு பெறுவதற்கான போட்டித்தேர்வு பயிற்சி, கணினிப்பயிற்சி சுருக்கெழுத்து பயிற்சி ஆகியவை இலவசமாக
திறன்வாய்ந்த தனியார்
பயிற்சி நிறுவனம் மூலம்
1 ஜூலை 2022 முதல் ஆரம்பமாக
உள்ளது.
பயிற்சி
காலத்தில் உதவித்தொகை ரூ.1000
வழங்கப்படும் மற்றும்
இலவசமாக போட்டி தேர்வு
பயிற்சி புத்தகங்கள் மற்றும்
எழுது பொருள்களும் வழங்கப்படும்,. இந்த பயிற்சியில் சேர்ந்து
பயனடைய விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய
விருப்பமனுவை கல்வி
மற்றும் குடும்பம் பற்றிய
சுய விபரங்களுடன் துணை
பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி,
ஆதி திராவிடர் மற்றும்
பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய
வாழ்வாதார சேவை மையம்,
மூன்றாம் தளம், வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோம், சென்னை,
தமிழ்நாடு என்ற முகவரிக்கு 24.06.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியில் சேர
விருப்பம் உள்ளவர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


