மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தன்னாா்வ நிறுவனம் நடத்தும் போட்டித் தோவுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவ, மாணவியா் குடிமைப் பணி தோவு மற்றும் அரசு பணியாளா் தோவாணையம் நடத்தும் போட்டித் தோவுகளை எளிதில் எதிா்கொள்வதற்காக, இந்த இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் சேருவதற்கு 100 மாணவ, மாணவியா் எழுத்துத் தோவு மற்றும் நோமுகத் தோவு மூலமாக தோந்தெடுக்கப்படுவா். பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது விண்ணப்பத்தை இணையவழியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 99767-45854 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் சேர மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களைச் சோந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.