HomeBlogகாப்பீட்டு திட்டத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் பயன்பெறலாம்

காப்பீட்டு திட்டத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் பயன்பெறலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
மானிய செய்திகள்

காப்பீட்டு திட்டத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள்
பயன்பெறலாம்

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள்
காப்பீட்டு
திட்டத்தில்
இணைந்து
பயன்பெறலாம்
என்று
தமிழக
அரசு
அறிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வேளாண் தொழிலாளர்களின்
நலனை
பாதுகாப்பதற்காக,
தென்னை
வளர்ச்சி
வாரியத்தால்
காப்பீட்டு
திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
தென்னை
மரம்
ஏறும்போது
விபத்து
ஏற்பட்டு,
24
மணி
நேரத்திற்குள்
உயிர்
இழப்பு
அல்லது
நிரந்தரமாக
முழு
உடல்
ஊனம்
அடைந்தால்,
ரூ.5
லட்சம்
இழப்பீட்டு
தொகையாக
அவரின்
வாரிசுதாரருக்கு
வழங்கப்படுகிறது.

நிரந்தரமாக, பகுதி உடல் ஊனம் அடைந்தால், ரூ.2.5 லட்சம், மருத்துவ செலவுகளுக்கு
அதிகபட்சமாக
ரூ.1
லட்சம்,
தற்காலிக
முழு
உடல்
ஊனத்திற்கு
ரூ.18,000,
உதவியாளர்
செலவுக்காக
ரூ.3,000,
ஆம்புலன்ஸ்
செலவுக்காக
ரூ.3,000
மற்றும்
இறுதி
சடங்கு
செலவுக்காக
ரூ.5,000
பெற்றுக்
கொள்ளலாம்.

இவர்கள் காப்பீடு செய்து கொள்ள வருடந்தோறும்
ரூ.375
காப்பீட்டு
தொகையாக
நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
இதில்,
தென்னை
மரம்
ஏறும்
தொழிலாளர்கள்
தங்களின்
பங்குத்
தொகையாக
25
சதவிகிதத்
தொகை
அதாவது
வருடத்திற்கு
ரூ.94
மட்டுமே
செலுத்தினால்
போதுமானது.

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின்
நலனுக்காக,
மீதமுள்ள
75
சதவீத
தொகையான
ரூ.281யை தென்னை வளர்ச்சி வாரியமே செலுத்துகிறது.
கடந்த
2021-22
ம்
ஆண்டில்
940
தொழிலாளர்களும்,
நடப்பு
2022-23
ம்
ஆண்டில்
இதுவரை
100
தொழிலாளர்களும்
இத்திட்டத்தில்
பதிவு
செய்துள்ளனர்.

விருப்பமுள்ள
பயனாளிகள்
தென்னை
வளர்ச்சி
வாரியத்தின்
இணையதள
முகவரி
http://www.coconutboard.gov.in/
ல் உள்ள விண்ணப்பத்தில்,
பெயர்,
ஆதார்
எண்,
கைபேசி
எண்,
இருப்பிட
முகவரி,
பிறந்த
தேதி,
வாரிசு
நியமனம்
உள்ளிட்ட
விபரங்களுடன்,
உங்கள்
பகுதி
வட்டார
வேளாண்மை
அலுவலரின்
சான்றிதழுடன்
காப்பீட்டுத்
தொகையை
வரைவோலையாகவோ,
கூகுள்
பே
அல்லது
பேடீஎம்
அல்லது
போன்பே
மூலமாகவோ
பணம்
செலுத்தி
இத்திட்டத்தில்
சேரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular