கொப்பரை தேங்காய்
கொள்முதல் – விவசாயிகளுக்கு அமைச்சா்
அழைப்பு
கொப்பரை
தேங்காயை தமிழக அரசின்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வழங்கி,
குறைந்தபட்ச ஆதரவு விலையை
விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்
என வேளாண்துறை அமைச்சா்
எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தென்னை அதிக அளவில்
சாகுபடி செய்யப்படும் கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, தஞ்சாவூா்,
திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூா்,
சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல், தருமபுரி, திருவாரூா், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய
21 மாவட்டங்களிலுள்ள 42 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரைத்
தேங்காய் கொள்முதல் தொடா்ந்து
நடைபெற்று வருகிறது.
மே
6-ஆம் தேதி வரை,
2,221 மெட்ரிக் டன் கொப்பரைத்
தேங்காய் விவசாயிகளிடமிருந்து நேரடியாக
குறைந்தபட்ச ஆதரவு விலையில்
கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது
கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில், கொப்பரைத்
தேங்காய் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையினைவிட குறைந்துள்ளது. இத்தருணத்தில் மாநில
அரசு எடுத்துவரும் முயற்சியை
நன்கு பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி,
அரவை கொப்பரைக்கு மத்திய
அரசு அறிவித்த குறைந்த
பட்ச ஆதரவு விலையான
கிலோவுக்கு ரூ.105.90 பெறலாம்.
எனவே,
அனைத்து மாவட்டங்களிலும் கொப்பரைத்
தேங்காய் உற்பத்தி செய்யும்
விவசாயிகள் தங்களது சிட்டா,
அடங்கல், ஆதார் அட்டை
மற்றும் வங்கிக் கணக்குப்
புத்தக நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு
செய்து, கொப்பரையை விற்று
பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரசு
நிர்ணயித்துள்ள தரத்தில்
கொப்பரை தேங்காய்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியான கொள்முதல்
செய்யப்படும் என்பதால்,
நன்கு உலர வைத்து,
சுத்தமான கொப்பரைகளை தரம்பிரித்து கொள்முதலுக்கு கொண்டு
வர வேண்டும்.
கொப்பரைத்
தேங்காய்க்கான தொகை
விவசாயிகளின் வங்கிக்
கணக்கில் நேரடியாக தமிழ்நாடு
மாநில வேளாண்மை விற்பனை
வாரியம் மூலம் அனுப்பி
வைக்கப்படும் என்றார்
அமைச்சா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


