TAMIL
MIXER EDUCATION.ன்
போட்டித்
தேர்வு
செய்திகள்
போட்டித் தேர்வுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம்
பயிற்சி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில
மற்றும் ஒன்றிய அரசு
நடத்தும் போட்டித்தேர்விற்கு தயாராகும்
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்
சார்பாக ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), இரயில்வே
தேர்வாணையம் (RRB), பணியாளர் தேர்வு
குழுமம் (SSC), வங்கிப் பணியாளர்
சேவைகள்குழுமம்(IBPS) உள்ளிட்ட
பல்வேறு பணிகளுக்கு தயாராகும்
மாணவ
மாணவிகள் பயன்பெறும் வகையில்
போட்டித் தேர்விற்கான பயிற்சி
வகுப்புகள் தமிழக அரசின்
கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
செய்யப்படுகிறது.
மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
புதுக்கோட்டையில் நேரடியாக
நடைபெறும் இலவச பயிற்சி
வகுப்புகளில் கலந்து
கொள்ள இயலாதவர்கள், தனியார்
நிறுவனங்களில்பணிபுரிந்து கொண்டு
அரசுப்பணிக்கு தங்களை
தயார்படுத்திக் கொள்ளும்
இளைஞர்கள் பயன்பெறும் வகையில்
கல்வி தொலைக்காட்சியில் போட்டித்
தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் தினமும் முற்பகல்
7.00 மணியிலிருந்து 9.00 மணி
வரையிலும் இதன் மறு
ஒளிபரப்பு பிற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையிலும்
ஊக்கவுரைகள் முந்தைய ஆண்டுகளில் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்புநிகழ்வுகள் ஆகிய
பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பு
செய்யப்படுகிறது.
மேலும்
தினசரி நிகழ்ச்சிகளை TN Career Services
Employment என்ற YoutubeChannel.ல்
அடுத்தடுத்த நாட்களிலும் காணலாம்.
எனவே போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும்
அனைத்து இளைஞர்களும் கல்வி
தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியினை கண்டு பயனடையலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


