கூட்டுறவு சங்கம்,
வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி
சான்று பெற்றுக்கொள்ள அழைப்பு – புதுக்கோட்டை
புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு
அரசினால் கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரை வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி
செய்யப்படும் என
அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன்வரை
நகைக்கடன் பெற்றவர்களில் 37,992 பேர்
தகுதி வாய்ந்த பயனாளிகள்
என கண்டறியப்பட்டு அவர்களுக்கு கடன் தள்ளுபடி சான்று
தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் தாங்கள் நகைக்கடன் பெற்றுள்ள
புதுக்கோட்டை மாவட்ட
மத்திய கூட்டுறவு வங்கியின்
26 கிளைகள், 136 தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன் சங்கங்கள்,
2 நகர கூட்டுறவு வங்கிகள்,
9 தொடக்க கூட்டுறவு வேளாண்மை
ஊரக வளர்ச்சி வங்கிகள்,
2 கூட்டுறவு விற்பனை சங்கங்கள்
மற்றும் தமிழ்நாடு மாநில
வேளாண்மை மற்றும் ஊரக
வளர்ச்சி வங்கி புதுக்கோட்டை கிளையினை அணுகி கடன்
தள்ளுபடி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.