சென்னை, தொழில் பழகுனர் பயிற்சியில் சேர சட்டப் படிப்பு மாணவர்கள், பட்டதாரிகளுக்கு, சி.எம்.டி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், பல்வேறு பிரிவுகளில் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பொறியாளர்கள், நகரமைப்பு வல்லுனர்களுக்கு மட்டுமல்லாது, தற்போது சட்ட படிப்பு மாணவர்கள், பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, சட்ட படிப்பை சமீபத்தில் முடித்தவர்கள், முதுநிலை சட்ட படிப்பு மாணவர்கள் என, இரண்டு பிரிவாக தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படும். இந்த இரு பிரிவுகளிலும், ஒவ்வொரு நிறுவனத்தில் இருந்தும், தலா 5 பேர் சேரலாம். இவர்களுக்கு, 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
இது குறித்து கூடுதல் தகவல்களை, சி.எம்.டி.ஏ.,வின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள, கியூ.ஆர்., குறியீட்டின் வாயிலாக அறியலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்து உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


