பத்தாம் வகுப்பு
தனித்தேர்வர்கள் தங்கள்
பெயரை பதிவு செய்து கொள்ளலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2021 – 2022ஆம்
கல்வி ஆண்டிற்கான பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள
நேரடி தனித் தேர்வர்களும் ஏற்கனவே 2012-க்கு முன்
பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில்
தோல்வியுற்றவர்களும் அறிவியல்
பாட செய்முறை பயிற்சி
வகுப்பில் சேர பெயர்களை
பதிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து
தனித்தேர்வர்களும் டிச-3ம்
தேதி வரை மாவட்டக்
கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
மாவட்டக்
கல்வி அலுவலரால் ஒதுக்கீடு
செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று
செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.பயிற்சி
வகுப்பில் 80 சதவீதம் வருகை
தந்த தனித்தேர்வர்கள் மட்டும்,
பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
கூடுதல்
விபரங்களுக்கு மாவட்டக்
கல்வி அலுவலர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இதற்கான
விண்ணப்ப படிவத்தை, www.dge.tn.gov.in என்ற
இணையத்தில் பதிவிறக்கம் செய்து
விபரங்களை பூர்த்தி செய்து,
வரும், டிச-3ம்
தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்