
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், பயன்பாடும் பெரிதும் அதிகரித்து விட்டது. இதன் ஆதிக்கத்தை அனைத்து துறைகளிலும் பார்க்க முடிகிறது.
எனவே செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் தான் தமிழக அரசின் தொழில் முன்வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொழில்முனைவோருக்கு ChatGPT பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒருநாள் பயிற்சி வகுப்பாக வரும் ஏப்ரல் 3ஆம் தேதி அன்று நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சென்னையில் உள்ள EDII-TN வளாகத்தில் செய்யப்படவுள்ளன. இந்த பயிற்சியானது வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை வழங்கும்.
ஒருநாள் ChatGPT பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள்
ChatGPT அறிமுகம், பிராம்ப்ட் நுணுக்கங்கள்: ChatGPT-இன் திறன்கள், வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான பிராம்ப்ட்டுகளை எழுதும் திறன்கள் கற்று தரப்படும்.
தெளிவான இலக்கு நிர்ணயம்: ChatGPT-ன் உதவியுடன் உங்கள் நோக்கம் மற்றும் இலக்குகளை சரியான வழியில் அமைக்க, செயல்படுத்தலாம்.
மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் யுக்திகள்: ChatGPT-ஐ பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங், சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்று கொள்ளலாம்.
கான்டென்ட் உருவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் ஈர்ப்பு: தாக்கம் செய்கிற கான்டென்ட் உருவாக்கவும், வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்தவும் AI கருவிகளை பயன்படுத்த கற்று கொள்ளலாம்.
செயல்திறன் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு உத்திகள்: வணிக செயல்திறனை துல்லியமாக கண்காணிக்க, ChatGPT-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்ய கற்று கொள்ளலாம்.
நேரடி சிக்கல் தீர்வு: பயனாளர் எதிர்கொள்ளும் தொழில்முனைப்பு சவால்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமர்விற்கு தீர்வுகளை கண்டுபிடிக்கலாம்.
விண்ணப்பமும், சான்றிதழும்
இதில் கலந்து கொள்வோருக்கு 100க்கும் மேற்பட்ட ChatGPT பிராம்ட்கள் உடன் கூடிய மின் புத்தகம் வழங்கப்படும். மேலும் அன்றாட பிராம்ட் வழிகாட்டுதல்கள், புதுப்பிப்புகளுக்கான வாட்ஸ்-அப் அணுகலும் அளிக்கப்படும். இந்த பயிற்சியை பெறுவதற்கு www.ediitn.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி முடிந்ததும் அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

