TAMIL MIXER EDUCATION.ன்
விழுப்புரம்
செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தில் பட்டய பயிற்சி
– விழுப்புரம்
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழி கூட்டுறவு
பட்டய பயிற்சி துவங்கப்பட உள்ளது.
விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023ம் ஆண்டிற்கான 22வது அஞ்சல் வழி
கூட்டுறவு பட்டய பயிற்சி
துவங்கப்பட உள்ளது. இதற்கான
கல்வி தகுதியாக பழைய
+1 வகுப்பு தேர்ச்சி அல்லது
புதிய பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப
படிவத்தில் விண்ணப்பதாரர் பணி
நியமனம் செய்யப்பட்ட முறைகள்
குறித்து, அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அல்லது
கருணை அடிப்படையில் அல்லது
அரசு, பதிவாளர் உத்தரவுப்படி விபரம் குறிப்பிட வேண்டும்.
பயிற்சியானது அலுவலக
வார விடுமுறை நாட்களில்
நடைபெறும்.
தேர்ச்சி
பெற்ற பயிற்சியாளர்களுக்கு பயிற்சி
முடிவில் கூட்டுறவு மேலாண்மை
பட்டயம், கணினி மேலாண்மை
மற்றும் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய
3 சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விண்ணப்ப படிவம்
21ம் தேதி முதல்
28ம் தேதி வரை
அலுவலகத்தில் 100 ரூபாய்
செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும்
ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சி
ஆகஸ்ட் 8ம் தேதி
துவங்கப்படுகிறது.
மேலும்,
விபரங்களுக்கு விழுப்புரம், வழுதரெட்டி, எல்லீஸ்சத்திரம் சாலையில்
உள்ள கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தை நேரிலோ அல்லது
04146 259467
மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


