HomeBlogமருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வில் மாற்றங்கள் – மத்திய அரசு

மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வில் மாற்றங்கள் – மத்திய அரசு

 

மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வில் மாற்றங்கள்மத்திய அரசு

நாடு
முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ஆன்லைன்
மூலமாக நடத்த திட்டம்
இல்லை என மத்திய
அரசு தெரிவித்துள்ளது.

நாடு
முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க
நீட் நுழைவுத் தேர்வு
நடத்தப்படுகின்றன. இதே
போல மத்திய கல்வி
நிறுவனங்களில் பொறியியல்
படிப்புகளுக்கான JEE
நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றன.

இந்த
ஆண்டு மாணவர்களின் நலன்
கருதி ஒரு ஆண்டுக்கு
4
முறை இந்த தேர்வுகள்
நடத்தப்படுகின்றன. மேலும்
இந்த தேர்வுகளை வழக்கமாக
எழுத்து முறை மூலமாகவோ
அல்லது ஆன்லைன் மூலமாகவோ
எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே போல எம்.பி.பி.எஸ்.,
மருத்துவப் படிப்புக்கான, நீட்
நுழைவுத் தேர்வையும், ஆண்டுதோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை
நடத்த வேண்டும்; ஆன்லைன்
வாயிலாகவும் தேர்வு எழுத
வாய்ப்பளிக்க வேண்டும்
என பலர் கோரிக்கை
வைத்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய
உயர்கல்வித்துறை
செயலர் அமித் கரே
கூறுகையில்:

NEET
மற்றும் JEE., தேர்வுகளுக்கு இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. JEE தேர்வுகள்
சில குறிப்பிட்ட கல்லுாரியில் பொறியியல் படிப்பில் சேருவதற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன.

ஆனால்
நீட் தேர்வு நாடு
முழுவதும் உள்ள மருத்துவ
கல்லூரிகளில் மாணவர்
சேர்க்கைக்கான நடத்தப்படுகின்றன. எனவே மத்திய
அரசும் நீட் தேர்வை
ஆண்டுக்கு பல முறை
வைக்க வேண்டும் என
எண்ணுகிறது. அதே போல
ஆன்லைன் மூலமாக நீட்
தேர்வு நடத்துவது சாத்தியம்
இல்லை. அவ்வாறு நடத்துவதால் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. உயிரியல் படிக்கும்
ஒரு மாணவன் கணினி
மூலம் தேர்வு எழுத
தனி பயிற்சி எடுக்க
வேண்டும்.

மேலும்
ஆண்டுக்கு பல முறை
நீட் தேர்வு நடத்துவது
குறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்க வேண்டி
உள்ளது. இந்த மாற்றம்
வர ஆறு முதல்
எட்டு மாதங்கள் வரை
கால அவகாசம் தேவை.
மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூன்
ஜூலை மாதங்களில் மட்டுமே
நடைபெறும். எனவே குறைந்த
கால அவகாசம் மட்டுமே
உள்ள நிலையில் இந்த
மாற்றங்களை கொண்டு வந்தால்
மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அதே
போல முதுகலை நீட்
தேர்வுகளுக்கான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம்
18
ஆம் தேதி நடத்தப்படும் இந்த தேர்வுகளுக்கு எந்தெந்த
பாடங்களில் இருந்து கேள்விகள்
கேட்கப்படும் என்பது
கூட, இன்னும் முடிவாகாததால், மாணவர்கள் மத்தியில் குழப்பம்
எழுந்துள்ளது.

மேலும்
இந்த தேர்வுக்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்ப
கட்டணம் 3,750 ரூபாயில் இருந்து
5,015
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி.,
எஸ்.டி., மற்றும்
மாற்று திறனாளிகள் பிரிவினருக்கு, 2,750 ரூபாயில் இருந்து,
3,835
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே
போல தேர்வு மையங்கள்
165
ல் இருந்து, 255 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு
நடைபெறும் நேரமும் மதியம்,
3:30
மணி முதல், இரவு,
7:00
மணி வரை இருந்தது
தற்போது, மதியம், 2:00 மணி
முதல், மாலை, 5:30 மணி
வரை மாற்றப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular