6 வங்கிகளின் IFSC CODE.கள் மாற்றம்
பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் Union Bank of
India, Bank of India, ஆந்திரா வங்கி, கார்பொரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி,
சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல்
பேங்க் ஆஃப் காமர்ஸ்
ஆகிய ஆறு வங்கிகளுக்கான IFSC Code.கள் மாற்றப்பட்டுள்ளது.
இனி
இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் புதிய IFSC Code பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக
பஞ்சாப் நேஷனல் வங்கிகளுடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப்
காமர்ஸ் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த
இரண்டு வங்கிகளுக்கும் IFSC Code ஏப்ரல்
1ஆம் தேதி முதல்
மாற்றப்பட்டுள்ளது. யூனியன்
பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி இணைக்கப்பட்டுள்ளதால் இதன்
IFSC Code ஏப்ரல் 1ஆம் தேதி
முதல் மாற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து
இந்தியன் வங்கியுடன் அலகாபாத்
வங்கி இணைக்கப்பட்டுள்ளதால், அலகாபாத்
வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மே
மாதம் 1ஆம் தேதி
முதல் IFSC Code மாற்றம்
செய்யப்படவுள்ளது. மேலும்
கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளதால், சிண்டிகேட் வங்கியின் IFSC Code ஜூலை
மாதம் 1ஆம் தேதி
முதல் மாற்றப்படவுள்ளது.