தேசிய திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்
பள்ளி
மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெறுவதற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறும் தேதி
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
தேசிய
திறனாய்வுத் தேர்வு (NTSE) 23ஆம்
தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முழு
ஊரடங்கு காரணமாக 29ஆம்
தேதி (சனிக்கிழமை) அன்று
நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
மேலும்,
இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைச் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in
என்ற இணையதளம் மூலம்
ஜனவரி 19ஆம் தேதிமுதல்
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள யூசர்
ஐடி, பாஸ்வேர்ட் பயன்படுத்தி இத்தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.