TAMIL MIXER EDUCATION.ன்
CUET செய்திகள்
NEET மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதிகளில் மாற்றம்
NEET
முதன்நிலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி குறிப்பிடாமல் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
முதுகலை
மருத்துவ படிப்புகளுக்கான நீட்
தேர்வு மே 21-ம்
தேதி நடைபெற்றது. நடப்பு
ஆண்டு நீட் முதுகலை
தேர்வை ஒரு லட்சத்து
82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவுகள்
ஜூன் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு
முடிவுகளுடன், முதுகலை
நீட் 2022-ம் ஆண்டிற்கான கட்–ஆஃப்களும் வெளியிடப்பட்டன. அதன்படி, பொதுப்பிரிவினர், EWS பிரிவினருக்கு கட் – ஆப் 275 ஆகவும்,
OBC & பட்டியலினத்தவருக்கு கட்
– ஆப் 245 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு கட் – ஆப்
260 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
செப்டம்பர் 1ம் தேதி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டிருந்தது தற்பொழுது
கவுன்சிலிங் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து
தேசிய தேர்வு முகமை
வெளியிட்டுள்ள அறிவிப்பில்; செப்டம்பர் 1ம் தேதி
தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நீட் முதுநிலை
கலந்தாய்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேசிய
மருத்துவ ஆணையம்.
இந்த
முதுநிலை மருத்துவ படிப்புகளில் கூடுதல் இடங்களை சேர்க்க
வேண்டியதன் காரணமாக கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow