காவலர் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு 4ம் தேதி
துவங்குகிறது
காவலர்
தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு வரும் 4ம்
தேதி துவங்கி 7ம்தேதி
வரை நடக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக
உள்ள 390 காவலர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றிப்
பெற்றவர்களுக்கான ரிசல்ட்
வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அடுத்த
மாதம் 4ம் தேதி
முதல் 7ம் தேதி
வரை கோரிமேடு போலீஸ்
மைதான சமுதாய நலக்கூடத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
வரும் 4ம் தேதி
103 பேர், 5ம் தேதி
100 பேர், 6ம் தேதி
100 பேர், 7ம் தேதி
87 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வர அழைப்பு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ்
சரிபார்ப்பு தினசரி காலை
9 மணிக்கு துவங்குகிறது.சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு வருபவர்கள் பிறந்த சான்றிதழ், கல்வி
தகுதிக்கான சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ், சாதி சான்றிதழ்,
புகைப்படங்கள் உள்ளிட்ட
ஒரிஜனல் சான்றிதழ்களை கொண்டுவர
வேண்டும்.மேலும் ஒரிஜனல்
சான்றிதழ்களை ஜெராக்ஸ்
சான்றிதழ்களையும் சுய
கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த
சுய கையொப்பத் திற்கான
படிவத்தினை https://police.py.gov.in/
என்ற இணைய முகவரியில் மூன்று டவுண்லோடு செய்து,
அண்மை யில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தவறினால், உத்
தேச தேர்வு ரத்தாகிவிடும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


