Sunday, August 31, 2025
HomeBlogமத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டம் – கால அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டம் – கால அவகாசம் நீட்டிப்பு

 

மத்திய அரசின்
கடன் உத்தரவாத திட்டம்
கால அவகாசம் நீட்டிப்பு

CORONA குறு, சிறு, நடுத்தர
தொழில் நிறுவனங்கள் துறையில்
உற்பத்தி மற்றும் இதர
செயல்பாடுகள் கடுமையாக
பாதிக்கப்பட்டது. இதனை
சரி செய்யும் பொருட்டு
மத்திய அரசு, அவசர
கால கடன் உத்தரவாத
திட்டத்தை அமல்படுத்தியது.

இந்த
திட்டம் மூலமாக அந்த
நிறுவனங்களுக்கு ரூ.3
லட்சம் கோடி கூடுதல்
கடன் வழங்கப்படுகிறது. இந்த
கடன்களுக்காக, தேசிய
கடன் உத்தரவாத டிரஸ்டி
கம்பெனி லிமிடெட் (NCGTC) மூலமாக
உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவசரகால
கடனளிப்பு (GECL) ஏற்பாட்டின் படி,
100
சதவீத உத்தரவாதம் வழங்கப்படும். இந்த கடன்களை நாடு
முழுவதும் உள்ள 12 பொதுத்துறை வங்கிகள், 24 தனியார் துறை
வங்கிகள், 31 வங்கி சாரா
நிதி நிறுவனங்கள் ஆகியவை
வழங்குகின்றன.

இந்த
திட்டம்
தற்போது மேலும் 3 மாதங்கள்
நீட்டிக்கப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது
ஜூன் மாதம் 30ம்
தேதி வரை இந்த
திட்டத்திற்கான காலஅவகாசம் நீடிக்கப்பட உள்ளது. மூன்றாம்
கட்டத்தில் இருக்கும் இந்த
திட்டத்தில் தற்போது விருந்தோம்பல், பயணம், சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு போன்ற
துறைகளுக்கு கடன் வழங்கப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
திட்டத்தில் 3 லட்சம் கோடி
ரூபாய் முழுவதையும் கடனாக
கொடுத்து முடிக்கும் வரை
அல்லது June 30ஆம்
தேதி வரை செயல்பட
உள்ளதாக அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments