🔥 CBSE பள்ளிகளில் பெரிய மாற்றங்கள் – புதிய தேசிய கல்விக் கொள்கை உள்ளடக்கங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது!
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) இந்த ஆண்டிலிருந்து மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) அடிப்படையில் பள்ளி சார்ந்த விதிகளை மாற்றி அமைத்து வருகிறது.
கல்வி அமைச்சக ஆலோசனைகளின் படி, பாடத்திட்டம், தேர்வு முறை மற்றும் பாடப்பட்டியல் ஆகியவை 2025–26 முதல் முழுமையாக மேம்படுத்தப்பட உள்ளன.
🟩 1. 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி/தோல்வி முறை ரத்து
NEP அடிப்படையில்,
✔️ 1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்ச்சி திட்டம் நீக்கப்பட்டது
✔️ Continuous Assessment முறை அதிகரிக்கப்படுகிறது
✔️ Project-based & Competency-based learning முக்கியமாகிறது
இது மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கவும், திறமையை வளர்க்கவும் உதவும்.
🟩 2. 10ம் வகுப்பு – ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு
இந்த ஆண்டு முதல் CBSE 10th Board Exams மாற்றம்:
- 📌 மாணவர்கள் ஒரு ஆண்டில் இரண்டு முறை Board Exam எழுதலாம்
- 📌 சிறந்த மதிப்பெண் எது என்றால் அது கணக்கில் கொள்ளப்படும்
- 📌 Reappear என்ற மனஅழுத்தம் குறையும்
- 📌 Skill mastery-க்கு அதிக வாய்ப்பு
இது 2025–26ல் முழுமையாக நடைமுறைக்கு வரும்.
🟩 3. அடுத்த கல்வியாண்டு முதல் – கூடுதல் இந்திய மொழி பாடம் + ஒரு திறன் சார்ந்த பாடம் கட்டாயம்
இப்போது வரை மாணவர்கள் 5 முக்கிய பாடங்கள் தான் படித்து வந்தனர்:
- ஆங்கிலம்
- ஹிந்தி
- கணிதம்
- அறிவியல்
- சமூக அறிவியல்
இனி CBSE புதிய மாற்றம்:
✨ புதிய கட்டாய பாடங்கள்:
1️⃣ ஒரு கூடுதல் இந்திய மொழி
2️⃣ ஒரு திறன் சார்ந்த பாடம்
அப்படியென்றால் மாணவர்கள்:
✔️ ஆங்கிலம்
✔️ ஹிந்தி
✔️ மேலும் ஒரு இந்திய மொழி (தமிழ் / மலையாளம் / கன்னடம் / சமஸ்கிருதம் போன்றவை)
✔️ 1 Skill-Based Subject
மொத்தம் 7 பாடங்கள் படிக்க வேண்டும்.
🟩 4. எந்த Skill-Based பாடங்களைத் தேர்வு செய்யலாம்?
CBSE வழங்கும் திறன் சார்ந்த பாடங்களில் மாணவர்கள் பின்வற்றிலிருந்து தேர்வு செய்யலாம்:
- 💻 செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
- 🧮 கணக்கீட்டு சிந்தனை (Computational Thinking)
- 🧘 உடற்கல்வி & நலவாழ்வு
- 🎨 கலைக் கல்வி
- 🌱 சுற்றுச்சூழல் (Environmental Studies)
- 🛒 Retail/சில்லரை விற்பனை
- 📊 Marketing
- 💰 நிதிசார் கல்வி (Financial Literacy)
- 🖥️ தகவல் தொழில்நுட்பம்
- 🏫 Vocational Skills
இந்த மாற்றம் மாணவர்களுக்கு எதிர்கால வேலை வாய்ப்புகளுடன் நேரடி தொடர்புடைய திறன்களை வழங்கும்.
🟩 5. NCERT புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்
இந்த மாற்றங்களுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தையும்
NCERT (என்.சி.இ.ஆர்.டி.) வெளியிடும்.
புதிய பாடத்திட்டம், மதிப்பீட்டு முறை, workbook & competency-based materials அனைத்தும் புதுப்பிக்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

