பத்தாம் வகுப்பு
மற்றும் +2 பொதுத்
தேர்வில், சிறப்பு தகுதியுடன் தேர்ச்சி பெற்ற மீனவ மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு
பத்தாம்
வகுப்பு மற்றும் +2
பொதுத் தேர்வில், சிறப்பு
தகுதியுடன் தேர்ச்சி பெற்ற
மீனவ சமுதாய மாணவர்கள்
ரொக்கப் பரிசு பெற
விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப் பட்டுள்ளது.
மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சிறப்பு
தகுதி பெற்ற மீனவ
மாணவர்களுக்கு ரொக்கப்
பரிசாக 5,000 ரூபாய் மற்றும்
7,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.இப்பரிசு
பெற, கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, (எஸ்.எஸ்.எல்.சி.,
மெட்ரிக்., சி.பி.எஸ்.இ.,
பிரெஞ்சு ப்ரைவே) மற்றும்
பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதம்
அதற்கு மேல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை Online மூலம் நாளை
18ம் தேதி முதல்
30ம் தேதி மாலை
5.30 வரை அனுப்பலாம். மேலும்
விபரங்களுக்கு மீன்வள
மற்றும் மீனவர் நலத்
துறை அலுவலகத்தை அணுகலாம்.