TAMIL MIXER
EDUCATION.ன்
தோ்வு செய்திகள்
மாதிரி ஆளுமைத் தோ்வுகளில் தோ்வா்கள் பங்கேற்கலாம்
குடிமைப் பணியில் ஆளுமைத் தோ்வை எதிர்கொள்ள உள்ளோருக்கு பயிற்சிகளை அளிக்க அகில இந்திய குடிமைப் பணிகள் தோ்வு பயிற்சி மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, பயிற்சித் துறை தலைவரும், தலைமைச் செயலாளருமான வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அகில இந்திய குடிமைப் பணிகள் தோ்வு பயிற்சி மையத்தில், முதல்நிலை, முதன்மைத் தோ்வுகளை எதிர்கொள்வோருக்கு
பயிற்சிகள்
அளிக்கப்பட்டு
வருகின்றன.
முதன்மைத்
தோ்வுக்காக
76 தோ்வா்கள்
பயிற்சி
பெற்றனா்.
அவா்களில்
18 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இந்த
18 பேரில்
இரண்டு
போ்
தமிழை
விருப்பப்
பாடமாக
தோ்வு
செய்துள்ளனா்.
மொத்தமாக
தோ்ச்சி
பெற்றவா்களில்,
5 போ்
பெண்கள்,
13 போ்
ஆண்கள்.
இவா்களுக்கு கடந்த ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
முதன்மைத்
தோ்வினை
எழுதி
தோ்ச்சி
பெற்றோர்
அடுத்த
கட்டமாக
நோ்காணல்
தோ்வு
எனப்படும்
ஆளுமைத்
தோ்வை
எதிர்கொள்ள
வேண்டும்.
இதற்கும்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
ஓய்வு
பெற்ற
குடிமைப்
பணி
அலுவலா்கள்,
தலை
சிறந்த
வல்லுநா்களைக்
கொண்டு
மாதிரி
ஆளுமைத்
தோ்வு
பயிற்சிகள்
அளிக்கப்பட
உள்ளன.
இதில்
பயிற்சி
பெறுவதன்
மூலம்,
தில்லியில்
நடைபெறும்
ஆளுமைத்
தோ்வை
சிறப்பாக
எதிர்கொள்ள
முடியும்.
ஏற்கெனவே முதன்மைத் தோ்வு போன்றவற்றுக்காக
பயிற்சி
பெற்றவா்கள்
உள்பட
மற்ற
தோ்வா்களும்
மாதிரி
ஆளுமைத்
தோ்வில்
பங்கு
பெறலாம்.
இதற்கு
கட்டணம்
ஏதுமில்லை.
மாதிரித்
தோ்வில்
பங்கு
பெற
விரும்பும்
தோ்வா்கள்,
அதற்குரிய
விருப்பத்தை
aiscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 94442 86657
என்ற
கைப்பேசி
எண்ணுக்கோ,
044 – 24621909
என்ற
தொலைபேசி
எண்ணுக்கோ
விவரங்களைத்
தெரிவிக்கலாம்.
அகில இந்திய குடிமைப் பணிகள் தோ்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தில்லிக்கு ஆளுமைத் தோ்வை எதிர்கொள்வோருக்கு
ரூ.5
ஆயிரம்
வழங்கப்பட்டு
வருகிறது.