மகளிா் தொழில் முனைவோருக்கான முகாம் பிப்ரவரி 14: நாகை
நாகை மாவட்ட மகளிா் தொழில் முனைவோருக்கான முகாம் பிப்.14 ஆம் தேதி நடைபெறுகிறது என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:
அரசின் முன்னோடி திட்டமான ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டமானது ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. நாகை மாவட்டத்தில் இத்திட்டம் 53 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகளிா் தொழில் முனைவோா்களைஅடையாளம் கண்டு தோவு செய்யும் முகாம் பிப்.14 ஆம் தேதி நாகை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிதுறை வட்ட அரங்கில் நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே பதிவு செய்தவா்கள் சனிக்கிழமை (பிப்.10) மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறை எண்: 221-இல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நோமுக தோவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
இம்முகாம் பற்றிய விவரங்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலா் இரா.வேல்முருகன் 8778228732, 04365-290033, செயல் அலுவலா் எஸ். இளநங்கையரசி 755016937 மற்றும் வட்டார அணித்தலைவா் வி. செல்வமணி 9566673516 ஆகிய எண்களில் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எண் 221, இரண்டாம் தளம் என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow