வாக்காளர் அட்டையை
மின்னணு முறையில் அலைபேசியில் பதிவிறக்கம் செய்வதற்கான முகாம்
வாக்காளர்
பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தங்கள், வாக்காளர் அடையாள
அட்டையை, மின்னணு முறையில்
தங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்வதற்கான இரண்டு நாட்கள்
சிறப்பு முகாம் முதன்
முறையாக வரும் 13, 14ம்
தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 30,400 ஓட்டுச்சாவடிகளில் இந்த
சிறப்பு முகாம் நடைபெறும்.
வாக்காளர்
பட்டியலில் முதன் முறையாக
பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், ஏற்கனவே தங்கள் அலைபேசி
எண்ணை வழங்கியவர்கள் அனைவரும்
இந்த முகாமை பயன்படுத்தி, தங்கள் மின்னணு வாக்காளர்
அடையாள அட்டையை அலைபேசி,
கணினிகளில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என தமிழகத்
தலைமை தேர்தல் அதிகாரி
சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.