புனித யாத்திரை
மானியம் பெற அழைப்பு
மானசரோவர்,
முக்திநாத்திற்கு புனித
யாத்திரை சென்றவர்கள், அரசு
மானியம் பெற, ஏப்ரல்,
30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறநிலையத்
துறை அறிவித்துள்ளது.
சீனாவில்
உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் தலங்களுக்கு, புனித யாத்திரை சென்றவர்களுக்கு, மானியம் வழங்கும் திட்டத்தை,
அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 2021 ஏப்ரல்
முதல் யாத்திரை சென்றவர்கள் மானியம் கோரி தனித்தனியாக விண்ணப்பிக்கலாம்.மானசரோவர்
பயணித்தவர்களுக்கு தலா,
40 ஆயிரம் ரூபாயும், முக்திநாத் சென்று வந்தவர்களுக்கு தலா,
10 ஆயிரம் ரூபாயும், மானியமாக
வழங்கப்படும்.
விண்ணப்பங்கள், 500க்கு மேல் வந்தால்,
தகுதி, குறைந்த வருமானம்
அடிப்படையில், பயனாளிகள்
தேர்வு செய்யப்படுவர்.முதல்
முறையாக மானசரோவர், முக்திநாத் சென்றவர்களுக்கு மட்டுமே
மானியம் வழங்கப்படும். அறநிலையத்
துறையின், www.tnhrce.gov.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய
சான்றுகள் இணைப்புடன், ஆணையர்,
ஹிந்து சமய அறநிலையத்
துறை, எண் 119, உத்தமர்
காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 34 என்ற முகவரிக்கு, ஏப்ரல் 30க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


