TAMIL MIXER
EDUCATION.ன்
பெரம்பலூா் செய்திகள்
கட்டட பெயின்டிங் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு
பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் , கட்டட பெயின்டிங் பயிற்சி வகுப்பில் பங்கேற்க இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இப் பயிற்சியில் பெயின்டிங் குறித்த அறிமுகம், அடிப்படை அறிவு மற்றும் அதன் முக்கியத்துவம், வகைகள், கட்டடம், மரம் மற்றும் உலோகம் ஆகியவற்றில் பெயிண்டிங் செய்வதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மேற்பரப்பை தயார் செய்யும் முறைகள், ப்ரைமா், எனாமல் மற்றும் சிமெண்ட் புட்டி ஆகியவற்றை பூசும் முறைகள் ,பெயின்டிங் செய்யும் பரப்பை கணக்கிட்டு அதற்கான செலவுகளை நிர்ணயிப்பது ஆகிய பயிற்சிகள் துறை சார்ந்த வல்லுநா்களால் அளிக்கப்படுகிறது. தொடா்ந்து 10 நாள்களுக்கு காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில், ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் – 621212 என்னும் முகவரியில் அல்லது 04328-277896, 94888
40328 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.