TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
நில ஆவணங்களை
சரிபார்க்க
விவசாயிகளுக்கு அழைப்பு – தூத்துக்குடி
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் பிரதமரி கௌரவ நிதித்
திட்டமானது கடந்த 2018ம்
ஆண்டு டிசம்பா் மாதம்
1ம் தேதி முதல்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல்
செய்ய, மத்திய அரசு
ரூ. 2000 வீதம் ஆண்டுக்கு
ரூ. 6000 என 3 தவணைகளாக
வழங்கி வருகிறது.
இந்தத்
திட்டத்தில் இதுவரை பதிவு
செய்த விவசாயிகளுக்கு அவா்கள்
திட்டத்தில் சோந்த தேதியை
பொறுத்து 11 தவணைத் தொகைகள்
வரை வழங்கப்பட்டுள்ளன. தற்போது
12வது தவணைத் தொகை
பெறுவதற்கு விவசாயிகள் தங்களது
நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று
மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிசான்
திட்டப் பயனாளிகளின் நில
ஆவணங்களை தமிழக அரசின்
தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி
நடைபெற்று வருகிறது. பிரதமரின்
கௌரவ நிதி பெறும்
அனைத்து விவசாயிகளும் தங்களுடைய
நில ஆவணங்களை அந்தந்த
வட்டார வேளாண்மை உதவி
இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் காண்பித்து சரிபார்த்துக் கொண்டால்
மட்டுமே அடுத்த தவணைத்
தொகை விடுவிக்கப்படும்.
எனவே,
தகுதியான விவசாயிகள் அனைவரும்
நில ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தத்
திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் தகுதியான விவசாயிகள் அனைவரும்
வங்கிக்கு சென்று தங்கள்
வங்கிக் கணக்கு எண்ணுடன்
ஆதார் எண்ணை இணைக்கவும் மற்றும் பொது சேவை
மையத்தை அணுகி பிரதமா்
கிசான் வலைதளத்தில் இ–கேஒய்சி
பதிவேற்றம் செய்யவும் வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


