தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட செயலாக்கத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்துக்கு 2023- 24 ஆம் நிதியாண்டில் வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்குப் பின் சேமித்து வைப்பதற்காக 25 மெ.டன் (1 யூனிட்) கொண்ட குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு 50 சதவீத மானியத்தில் பின்னேற்பு மானியமாக ரூ. 87,500 வழங்க நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
எனவே, இத் திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெறாத விவசாயிகள் தங்களது நிலத்துக்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம்- 2, வங்கி கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அக். 20 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் மூலமாக, அல்லது இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


