இலவச மனநல ஆலோசனை பெற அழைப்பு எண் வெளியீடு – பெரம்பலூா்
உலக மனநல தின விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மனநல ஆலோசனை பெற பிரத்யேக அழைப்பு எண் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில்
மன
அழுத்தத்திலிருக்கும்
மாணவா்களுக்கு
மருத்துவ
வல்லுநா்களால்
இலவச
மனநல
ஆலோசனை
வழங்கிடும்
வகையில்
உருவாக்கப்பட்டுள்ள
பிரத்யேக
அழைப்பு
எண்ணை
வெளியிட்டு
மாவட்ட
ஆட்சியா்
பேசியது:
பல்வேறு காரணங்களால் மாணவ, மாணவிகள் மன அழுத்தத்துக்கு
ஆளாகும்
நிலையைத்
தவிர்க்கவும்,
அவா்களுக்கு
ஏற்படும்
சந்தேகங்களை
நிவா்த்தி
செய்திடும்
வகையிலும்
மாவட்ட
நிர்வாகத்தின்
சார்பில்
பிரத்யேகமாக
180042-59565
என்னும்
இலவச
தொலைபேசி
எண்
அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும்
24 மணி
நேர
சேவை
நிலையமான
ஒன்
ஸ்டாப்
சென்டரில்
இந்த
இலவச
எண்
இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த எண்ணுக்குத் தொடா்புகொண்டு
மன
அழுத்தம்
தொடா்பான
ஆலோசனைகளை
கேட்கும்
நபா்களுக்கு,
மனநல
மருத்துவ
வல்லுநா்களின்
ஆலோசனை
வழங்கப்படும்.
மேலும், பேசுபவா்களின்
தகவல்கள்
ரகசியம்
பாதுகாக்கப்படும்.
இன்றைய சூழ்நிலைகளில்
பல்வேறு
வகையான
தகவல்கள்
கிடைக்கின்றன.
இவற்றில்,
எது
உண்மை
மற்றும்
தேவையான
தகவல்கள்
எது
என்பதை
எவ்வாறு
புரிந்துகொள்ள
வேண்டும்
என்ற
தன்மை
அனைவருக்கும்
இருக்கும்
எனக்
கூற
முடியாது.
இதற்காக ஆலோசனை பெற்று விட்டால், அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மாணவா்களுக்கு
ஏதேனும்
சந்தேகம்
ஏற்பட்டால்,
சரியான
மருத்துவ
நிபுணா்களிடம்
கேட்டு
தெரிந்துகொள்ள
வேண்டும்.
தற்கொலை
எண்ணங்கள்,
மனச்
சோர்வு,
மன
அழுத்தம்,
அதீத
இணையதள
பயன்பாடு
உள்ளிட்ட
பல்வேறு
பிரச்னைகளால்
பாதிக்கப்பட்டோருக்கு
இந்த
எண்
மிக
பயனுள்ளதாக
அமையும்.
எனவே, இந்த இலவச எண்ணில் தைரியமாகவும்,
நம்பிக்கையுடனும்
அணுகி
மாணவா்கள்
பயன்பெறலாம்.