HomeBlogஇலவச ஓட்டுநா் பயிற்சி பெற இளைஞா்களுக்கு அழைப்பு - பெரம்பலூா்

இலவச ஓட்டுநா் பயிற்சி பெற இளைஞா்களுக்கு அழைப்பு – பெரம்பலூா்

இலவச ஓட்டுநா்
பயிற்சி பெற இளைஞா்களுக்கு அழைப்பு
பெரம்பலூா்

இலவச
ஓட்டுநா் பயிற்சி பெற
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த
இளைஞா்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூரிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மையத்தின் இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இலவச
ஓட்டுநா் பயிற்சி பயிற்சி
வகுப்புகள் நவம்பா் 10ம்
தேதி முதல் அளிக்கப்படவுள்ளன. பயிற்சி பெற
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த
18
முதல் 45 வயதுக்கு குறைவாக,
எழுத படிக்கத் தெரிந்தவராக, சுயத்தொழில் தொடங்குவதில் ஆா்வம்
உள்ளவராக இருக்க வேண்டும்.

தொடா்ந்து
30
நாள்களுக்கு காலை 9.30 முதல்
மாலை 5 மணி வரை
அளிக்கப்படும் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய
உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால்
அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
வழங்குவதோடு, கடன் பெற்று
தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

பயிற்சி
பெற விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்திலுள்ள ஐஓபி
வங்கியின் கிராமிய சுய
வேலைவாய்ப்புப் பயிற்சி
மைய இயக்குநரிடம் தங்களது
பெயா், வயது, விலாசம்,
கல்வித் தகுதி ஆகியவற்றை
குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப
அட்டை, Aadhar அட்டை,
பெற்றோரின் 100 நாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் நகல், 3 Passport அளவு
புகைப்படங்கள் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து,
நவம்பா் 9- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும்
விவரங்களுக்கு ஐஓபி
கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம், ஷெரீஃப்
காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் என்ற
முகவரி அல்லது 04328-277896,
9488840328
ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular