வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு – சேலம்
சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
படித்த
வேலை வாய்ப்பற்ற இளைஞர்,
அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து, உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், சேலம்
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற,
மனுதாரரின் குடும்ப ஆண்டு
வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
எஸ்.சி.,
எஸ்.டி., பிரிவினர்,
45 வயதுக்குள்ளும், மற்றவர்,
40 வயதுக்குள்ளும் இருத்தல்
வேண்டும். 10ம் வகுப்பு
தோல்வி அடைந்தவருக்கு, 200 ரூபாய்,
தேர்ச்சி பெற்றவருக்கு, 300, பிளஸ்
2 தேர்ச்சிக்கு, 750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு, 1,000 ரூபாய்
வழங்கப்படுகிறது. பொறியியல்,
மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற
தொழிற்படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படாது.விண்ணப்ப
படிவம் பெற விரும்புவோர், வேலைவாய்ப்பு அடையாள
அட்டையை ஆதாரமாக காட்டி,
அலுவலக வேலைநாளில் இலவசமாக
பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அனைத்து
அலுவலக வேலைநாளில், சேலம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அசல் கல்வி சான்றிதழ்,
வேலைவாய்ப்பு அடையாள
அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் சமர்ப்பிக்கலாம்.