சிறு, குறு
தொழில் தொடங்க மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
தமிழக
அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மூலம், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு,
குறு தொழில்களுக்கான வங்கிக்
கடன் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
18 முதல்
55 வயது வரையுள்ள இருபால்
மாற்றுத் திறனாளிகள் இதற்கு
விண்ணப்பிக்கலாம். இதுநாள்
வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மூலம் வங்கிக்கடன் மானியம்
பெறாதவராக இருக்க வேண்டும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது
அடையாள அட்டை நகல்,
குடும்ப அட்டை நகல்,
மாற்றுச்சான்றிதழ், Aadhar அட்டை நகல், வங்கிக்
கணக்குப் புத்தக நகல்
மற்றும் Passport அளவு
புகைப்படம்
–
1 ஆகியவற்றுடன் மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகம், ஆட்சியரக வளாகம்,
பெரம்பலூா் என்ற முகவரியில் நேரில் அல்லது அஞ்சல்
மூலமாக நவம்பா் 15ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு 04328 225474 என்ற
எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.


