HomeBlogமானியத்தில் விதைகள் விவசாயிகளுக்கு அழைப்பு

மானியத்தில் விதைகள் விவசாயிகளுக்கு அழைப்பு

Call for subsidized seeds to farmers

TAMIL MIXER
EDUCATION.
ன்
மானிய செய்திகள்

மானியத்தில் விதைகள் விவசாயிகளுக்கு
அழைப்பு

திருத்தணி ஒன்றியத்தில்,
1,500
க்கும்
மேற்பட்ட
விவசாயிகள்,
காய்கறி
மற்றும்
பழ
வகை
பயிர்
ஆர்வத்துடன்
செய்து
வருகின்றனர்.

இந்த விவசாயிகளுக்கு,
திருத்தணி
தோட்டக்கலைத்
துறையின்
வாயிலாக
பல்வேறு
மானியங்களுடன்
விதைகள்
வழங்கப்பட்டு
வருகின்றன.
அந்த
வகையில்
தற்போது,
தேசிய
வேளாண்
வளர்ச்சித்
திட்டத்தின்
கீழ்,
இரண்டரை
ஏக்கருக்கு,
60
ஆயிரம்
ரூபாய்
மதிப்பிலான
சம்பங்கி
கிழங்கு
மற்றும்
உயிர்
உரங்கள்
வழங்கப்படுகின்றன.

அதேபோல வெண்டை, கீரை விதைகளுக்கு இரண்டரை ஏக்கருக்கு, 20 ஆயிரம் மதிப்பிலான விதைகள் மற்றும் உயிர் உரங்கள், கொத்தமல்லி பயிரிட, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கொத்தமல்லி விதைகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இது குறித்து திருத்தணி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கூறியதாவது:

சம்பங்கி கிழங்கு, வெண்டை மற்றும் கொத்தமல்லி கீரை விதைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும், 12 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையிலான உயிர் உரங்களும் வழங்கப்படுகின்றன.
தேவையான
விவசாயிகள்
தங்களது
ரேஷன்
கார்டு,
ஆதார்
கார்டு,
பாஸ்போர்ட்
போட்டோ,
நிலத்தின்
சிட்டா,
பட்டா,
அடங்கல்
மற்றும்
வங்கி
கணக்கு
ஆகியவற்றுடன்
விண்ணப்பமாக
தோட்டக்கலைத்
துறை
அலுவலர்களிடம்
கொடுக்க
வேண்டும்.

முன்னுரிமை அடிப்படையில்
மானியத்துடன்
விதைகள்
மற்றும்
உயிர்
உரங்கள்
வழங்கப்படும்.
இருப்பு
இருக்கும்
வரை
மட்டுமே
வழங்கப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!