திறன் மேம்பாட்டு பயிற்சி பெற அழைப்பு – 30 நாள் பயிற்சி
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக
அரசின், தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை
வாயிலாக, அரசு தோட்டக்கலைப் பண்ணை, ஆனைகட்டி மற்றும்
கண்ணம்பாளையத்தில் சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம்
செய்தல், நுண்ணீர் பாசன
அமைப்பு நிறுவுதல், பராமரித்தல், தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய, 30 நாள்
பயிற்சி அளிக்கப்படுகிறது.
பங்கேற்க
விரும்புவோர், தோட்டக்கலைத் துறையின் இணையதளத்தில் இடம்
பெற்றுள்ள விண்ணப்ப படிவத்தை
பதிவிறக்கம் செய்து, கோவை,
லாலி ரோடு கார்னரில்,
தடாகம் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட தோட்டக்கலை துணை
இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.பயிற்சியில் பங்கேற்போருக்கு, 30 நாட்களுக்கு போக்குவரத்து செலவுக்காக நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய்
அவர்களுடைய வங்கிக் கணக்கில்
நேரடியாக செலுத்தப்படும்.