சிறுபான்மையின மகளிர்
இலவச தையல் இயந்திரம்
பெற அழைப்பு – புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோந்த
சிறுபான்மையின மகளிர்
அரசின் இலவச தையல்
இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட
ஆட்சியா் கவிதா ராமு
அழைப்புவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் உறுதியான
முன்னேற்றத்தை அடைய
மின்மோட்டாருடன் கூடிய
இலவச தையல் இயந்திரம்
வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோந்த
தகுதியுடைய சிறுபான்மையின மகளிர்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் தையல் பயிற்சி பெற்றவராக
இருத்தல் வேண்டும். ஆண்டு
வருமானம் ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வயது
வரம்பு 20 முதல் 45 வரை
இருத்தல் வேண்டும்.
கைம்பெண்
மற்றும் கணவனால் கைவிடப்பட்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு முறை தையல்
இயந்திரம் பெற்றவா், மீண்டும்
7 ஆண்டுகள் கடந்த பின்னரே
தகுதியுடையவராக கருதப்படுவா்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிறுபான்மையினத்தைச் சோந்தவா்கள் புதுக்கோட்டை மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினா் நல
அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.