Sunday, August 10, 2025
HomeBlogஉயர் கல்வி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற அழைப்பு

உயர் கல்வி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற அழைப்பு

உயர் கல்வி
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற அழைப்பு

ஈரோடு
மாவட்டத்தில் தேசிய
குழந்தை தொழிலாளர் திட்ட
சிறப்பு பயிற்சி மையத்தில்
படித்து, அரசு அல்லது
அரசு உதவி பெறும்
பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.,
மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி
பெற்று உயர் கல்வி
பயில்வோருக்கு, அரசின்
தொழிலாளர் நலத்துறை, 500 ரூபாய்
மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்குகிறது.

படித்த
சிறப்பு பயிற்சி மையத்தின்
பெயர், சிறப்பு பயிற்சி
மையத்தில் படித்த வகுப்பு
விபரம், தற்போது படிக்கும்
கல்வி நிறுவன பெயர்,
முகவரி, கல்லூரி முதல்வரின் அத்தாட்சி சான்று, எஸ்.எஸ்.எல்.சி.,
மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்
பட்டியல் ஆகியவற்றின், இரு
நகல்கள் மற்றும் இரு
புகைப்படத்துடன் ஒரு
வாரத்துக்குள், தேசிய
குழந்தை தொழிலாளர் திட்டம்,
மாவட்ட கலெக்டர் அலுவலகம்,
6
வது தளம், ஈரோடு
– 638 011,
என்ற முகவரிக்கு நேரில்
அல்லது அஞ்சல் மூலம்
விண்ணப்பிக்கலாம்.

முன்பு
படித்த அல்லது தற்போது
செயல்பாட்டில் இல்லாத
சிறப்பு பயிற்சி மையத்தில்
விடுபட்டோரும் விண்ணப்பிக்கலாம். தற்போது செயல்பாட்டில் உள்ள, 15 தேசிய குழந்தை
தொழிலாளர் திட்ட மையங்களில் விண்ணப்பித்து பயன்
பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments