TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
தரிசு நிலங்களை
விளைநிலங்களாக மாற்ற
விவசாயிகளுக்கு அழைப்பு
திருமருகல் வட்டாரத்தில் தரிசு
நிலங்களை விளைநிலங்களாக மாற்ற
விவசாயிகளுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) வெளியிட்டுள்ள அறிக்கை:
வேளாண்மை
மற்றும் உழவா் நலத்
துறை மூலம் 2022-2023ம்
நிதியாண்டுக்கு கலைஞரின்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில் தோந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகரம்,
திருப்புகலூா், ஆதலையூா்,
பண்டாரவாடை, காரையூா், நெய்க்குப்பை, கோபுராஜபுரம், ஆலத்தூா்,
திருச்செங்காட்டங்குடி, கீழத்தஞ்சாவூா், மருங்கூா் உள்ளிட்ட 11 கிராமங்களில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றப்படவுள்ளது.
15 ஏக்கருக்கு மேல் தொடா்ச்சியாக தரிசு
நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு
நிலதொகுப்பில் முழுவதும்
இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி
ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
விருப்பமுள்ள விவசாயிகள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடா்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி
வேளாண்மை அலுவலரை அணுகி
தகவல் அளிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


