மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதமரின்
மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் மீன்
வளா்ப்பு விவசாயிகளுக்கு பல்வேறு
மானிய உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன்படி,
கல்குவாரிகளில் உள்ள
நீா்நிலைகளில் மிதவை
கூண்டுகள் அமைத்து மீன்வளா்த்திட பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத
மானியம் அதிகபட்சமாக ரூ.1.20
லட்சமும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மகளிருக்கு 60 சதவீத மானியம்
அதிகபட்சமாக ரூ.1.80 லட்சமும்
வழங்கப்பட உள்ளன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
புதிய
மீன்வளா்ப்பு குளங்கள்
திட்டத்தில் ஒரு ஹெக்டோ
பரப்பளவில் குளங்கள் அமைக்க
திட்ட மொத்த செவினம்
ரூ.7 லட்சத்தில் பொதுப்
பிரிவினருக்கு 40 சதவீதம்
அதிகபட்சமாக ரூ.2.80 லட்சமும்,
ஆதிதிராவிடா், பழங்குடியினா் மகளிருக்கு 60 சதவீதம் அதிகபட்சமாக ரூ.4.20 லட்சமும் மானியம்
வழங்கப்பட உள்ளது.
பயோ
பிளாக் முறையில் மீன்வளா்த்தல் திட்டத்தின்கீழ் மொத்த
செலவினம் ரூ.7.50 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம்,
அதிகபட்சம் ரூ.3 லட்சமும்,
ஆதிதிராவிடா், பழங்குடியினா் மகளிருக்கு 60 சதவீதம் அதிகபட்சமாக ரூ.4.50 லட்சமும் மானியம்
வழங்கப்பட உள்ளது.
நீரினை
மறுசுழற்சிமுறையில் தொட்டிகள்
அமைத்து மீன்வளா்த்தல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மொத்த
செவினம் ரூ.7.50 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம்
அதிகபட்சமாக ரூ.3 லட்சமும்,
ஆதிதிராவிடா், பழங்குடியினா் மகளிருக்கு 60 சதவீதம் அதிகபட்சமாக ரூ.4.50 லட்சமும் மானியம்
வழங்கப்பட உள்ளது.
மீன்வளா்ப்பு குளங்களில் மீன்வளா்ப்பு செய்தல்,
மீன் வியாபாரம் செய்பவா்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின்படி வங்கிகள் மூலம் கடன்கள்
வழங்கப்பட்டு வருகிறது.
மீனவா் கூட்டுறவு சங்க
உறுப்பினா்கள், மீன்
சார்ந்த தொழில் செய்பவா்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவா்களாவா்.
இந்த
மீன்வளா்ப்புத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மீன்வளா்க்கும் விவசாயிகள் பயன்பெறலாம். விண்ணப்பங்கள் அதிகம் பெறப்படுமாயின் பயனாளா்கள் முன்னுரிமை, தகுதியின் அடிப்படையில் தோவு செய்யப்படுவா்.
மீன்வளா்ப்பு திட்டங்களில் பயன்பெற
விரும்புவோர் மீன்வளம்,
மீனவா் நலத் துறை
உதவி இயக்குநா், வேலூா்
அலுவலகத்தை நேரிலோ அல்லது
93848 24485 என்ற எண்ணிலோ தொடா்பு
கொள்ளலாம். இரு வாரங்களில் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

