பயிர் காப்பீட்டிற்கு அழைப்பு
ராஜபாளையம் வேளாண் துறை உதவி இயக்குனர் சுப்பையா செய்தி குறிப்பு:
இயற்கை
சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க
மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு ரூ.411, பருத்திக்கு ரூ.452
பிரீமியம் செலுத்தி நவ.
30 வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
நெல்
விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.
373 செலுத்தி டிச. 15 வரை
காப்பீடு செய்யலாம்.விவசாயிகள் பட்டா, அடங்கல், வங்கி
புத்தகத்தின் முதல்
பக்க நகல், ஆதார்
உடன் அருகில் உள்ள
இ–சேவை மையம்,
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி,
தொடக்க வேளாண் கூட்டுறவு
சங்கங்கள் சென்று பயிர்
காப்பீடு செய்துகொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு வேளாண்
உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.