Join Whatsapp Group

Join Telegram Group

CA ஜூன் மாத முதல்நிலை தேர்வு –விண்ணப்ப பதிவு

By admin

Updated on:

CA ஜூன் மாத
முதல்நிலை தேர்வுவிண்ணப்ப
பதிவு

இந்திய
பட்டய கணக்காளர்கள் நிறுவனம்
(ICAI)
பட்டயக் கணக்கறிஞர்கள் (CA) தொழிலை
வழிநடத்த உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான நிறுவனம் ஆகும். பட்டயக்
கணக்காளராக விரும்பும் நபர்கள்
ICAI
நிறுவனம் நடத்தும் தகுதித்
தேர்வில் கட்டாயம் தேர்ச்சி
பெற வேண்டும். தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மத்திய
அரசிடம் இருந்து சான்றிதழ்
வழங்கப்படும். இவர்கள்
மத்திய அரசால் பதிவு
செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக அறிவிக்கப்படுவார்கள்.

2021 ஜூன்
மாத முதல்நிலை தேர்வுகள்
ஜூன் மாதம் 24, 26, 28 மற்றும்
30
ம் தேதிகளில் நடக்க
இருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. தேர்வு
கட்டணம் செலுத்த மே
4
ம் தேதி இறுதி
நாளாகும். தேர்வு கட்டணத்தை
அதற்குள் செலுத்த தவறினால்
ரூ.600 தாமத கட்டணத்துடன் மே 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வின் முதல் மற்றும்
இரண்டாம் தாள் மதியம்
2
மணி முதல் 5 மணி
வரை 3 மணி நேரங்கள்
நடைபெறும். மூன்றாம் மற்றும்
நான்காம் தாள் மதியம்
2
மணி முதல் 4 மணி
வரையிலும் 2 மணி நேரம்
நடைபெறும். முதல் மற்றும்
2
ம் தாள்களுக்கு முன்னதாக
15
நிமிடங்கள் வாசிப்பிற்கு வழங்கப்படும். 3ம் மற்றும் 4ம்
தாளுக்கு வாசிப்பு நேரம்
கிடையாது. தேர்வு குறித்த
அதிக தகவல்களுக்கு http://icaiexam.icai.org என்ற
அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]