CA, சிஎஸ்,
ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகள் இனி முதுநிலை படிப்புகளுக்கு இணையானவை
இந்திய
பட்டய கணக்காளர்கள் நிறுவனம்
(ICAI) பட்டயக் கணக்கறிஞர்கள் (CA) தொழிலை
வழிநடத்த உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான நிறுவனம் ஆகும். பட்டயக்
கணக்காளராக விரும்பும் நபர்கள்
ICAI நிறுவனம் நடத்தும் தகுதித்
தேர்வில் கட்டாயம் தேர்ச்சி
பெற வேண்டும். இதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய
அரசிடம் இருந்து சான்றிதழ்
வழங்கப்படும். இவர்கள்
மத்திய அரசால் பதிவு
செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக அறிவிக்கப்படுவார்கள்.
யுஜிசி.யின்
550-வது ஆலோசனை கூட்டம்
கடந்த மாதம் நடைபெற்றது. அனைத்து பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து
கொண்டனர். யுஜிசியின் ஆலோசனை
கூட்டத்தில் உயர்கல்வி பற்றிய
முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
இந்திய
கணக்கு தணிக்கையாளர் அமைப்பானது, தொழில் நிறுவன செயலர்களுக்குக்கான இந்திய கல்வி
கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தாங்கள் வழங்கும் சிஏ,
சிஎஸ், ஐசிடபிள்யுஏ போன்ற
படிப்புகளை முதுநிலை படிப்புக்ளுக்கு இணையாக அறிவிக்க வேண்டும்
என்று யுஜிசிக்கு கோரிக்கை
விடுத்தன. இந்த கோரிக்கையின் படி, CA, சிஎஸ்,
ஐசிடபிள்யுஏ ஆகிய படிப்புகள் இனி முதுநிலை படிப்புகளுக்கு இணையாக கருதப்படும் என்று
இந்திய பல்கலைக்கழக மானியக்
குழுவின் இணை செயலர்
சுரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.