HomeBlogபிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம். உட்பட 19 மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்

பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம். உட்பட 19 மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்

பிஎஸ்சி நர்ஸிங்,
பி.பார்ம். உட்பட
19
மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப
பதிவு
தொடக்கம்

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சிநர்ஸிங், பி.பார்ம்., பிபிடி,
பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சுமற்றும் மொழி, நோய் குறியியல்)
உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த
19
வகையான துணை பட்டப்
படிப்புகள் உள்ளன.

இதில்
சுமார் 15 ஆயிரம் இடங்கள்
உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இப்படிப்புகளுக்கு 2021-2022ஆம்
கல்வி ஆண்டு மாணவர்
சேர்க்கைக்கு https://tnhealth.tn.gov.in/ மற்றும்
www.tnmedicalselection.org
ஆகிய
இணையதளங்களில் பதிவு
செய்வது 26.10.2021 காலை
10
மணிக்கு தொடங்குகிறது. நவ.8-ம்
தேதி மாலை 5 மணி
வரை பதிவு செய்யலாம்.
விண்ணப்பம், தகவல்குறிப்பேட்டை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் செயலாளர், தேர்வுக் குழு,
எண்.162, ஈவெரா பெரியார்
நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை
600010
என்ற முகவரியில் நவ.10-ம்
தேதி மாலை 5 மணிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular