HomeBlogபுதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ்
அறிவிப்பு

தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு அரசு
ஊழியர்களுக்கு போனஸ்
அறிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் பிரிவுபி மற்றும்
சி ஊழியர்களுக்கு 2020-2021.ஆம்
ஆண்டுக்கான போனஸ் வழங்க
நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

அதனை
தொடர்ந்து கடந்த ஒரு
மாதமாக அரசு ஊழியர்களுக்கான போனஸ் நடவடிக்கைளில் நிதித்துறை மும்முரமாக ஈடுபட்டு வந்தது.
அனைத்து பணிகளும் முடிந்து
போனஸ் தொடர்பாக தனது
முடிவினை நிதித் துறை
அறிவித்துள்ளது. மாநில
அரசில் பணிபுரியும் உற்பத்தி
சம்மந்தப்பட்ட போனஸ்
பெறாத பிரிவுபி
(
அரசிதழ் பதிவு பெற்ற
அதிகாரிகள் தவிர்த்து) மற்றும்
பிரிவு சி ஊழியர்கள்,
முழுநேர தற்காலிக ஊழியர்கள்,
2020-2021
ஆண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான அறிவிப்பினை நிதித்துறை வெளியிட்டு அனைத்து துறைகளுக்கும் தற்போது
சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

இதன்
மூலம் அரசிதழ் பதிவு
பெறாத பிரிவுபி
மற்றும் சி ஊழியர்களுக்கு போனசாக ரூ.6,908 மற்றும்
முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,200 ம் வழங்கப்பட
உள்ளது.

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி
ஊழியர்களுக்கு போனஸ்
தொகை அதிகபட்சமாக ரூ.1,184
வழங்கப்படும். இதனால்,
அரசு ஊழியர்கள் மற்றும்
முழுநேர தற்காலிக ஊழியர்கள்
15
ஆயிரம் பேர் பயனடைவர்.

இதன்
காரணமாக புதுச்சேரி அரசுக்கு
18
கோடி வரை கூடுதலாக
செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு சார்பு
நிறுவனங்கள்
புதுச்சேரியில் அரசு
துறைகள் மட்டுமின்றி அரசு
சார்பு நிறுவனங்கள் பல
உள்ளன. இவற்றிற்கு போனஸ்
இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில்
அரசு சார்பு நிறுவன
ஊழியர்களுக்கும் போனஸ்
அறிவிக்கப்பட உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular