ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக 14.03.2022 முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 13.04.2022 ஆகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில் பக்கம் எண் 4, வரிசை எண் 3(b) யில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் பட்டப்படிப்பு முடித்து பி.எட் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate-னை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க Online விண்ணப்பத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கையின் பக்கம் எண் 2, வரிசை எண் 3(a)ல் தாள் 1 க்கான கல்வித் தகுதிகள் குறித்தான வரையரையில் மேல்நிலைக் கல்வி முடித்து இறுதியாண்டு ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு (Diploma in Teacher Education) படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate-னை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க Online விண்ணப்பத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, பி.எட் இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு (Diploma in Teacher Education) இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate-னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.