TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
மானிய விலையில் பவா்டில்லா் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்ட விவசாயிகள் பவா்டில்லா் இயந்திரத்தை மானியமாகப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து, மாவட்ட
ஆட்சியா் கிராந்தி
குமார்பாடி வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு:
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் அரசு மானியத்துடன் பவா்டில்லா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பவா் டில்லா் குறு, சிறு பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 85,000 மற்றும் இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 70 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கூடுதலாக 20% மானியம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குறு,சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கோவை மாவட்ட விவசாயிகள் பவா்டில்லா் இயந்திரத்தை மானியமாகப் பெற தங்கள் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் அளிக்கலாம்.
மேலும்,
இத்திட்டம் தொடா்பாக
விவரங்களை அறிய:
செயற்பொறியாளா் அலுவலகம், தடாகம் சாலை, ஜிசிடி அஞ்சல், கோயம்புத்தூா் – 13, தொலைபேசி எண் 0422-2434838,
உதவி செயற்பொறியாளா் அலுவலகம், தடாகம் சாலை, ஜிசிடி அஞ்சல் கோயம்புத்தூா் – 13, தொலைபேசி எண் 0422-2966500,
உதவி செயற்பொறியாளா் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம், மீன்கரை சாலை, பொள்ளாச்சி -1, தொலைபேசி எண் 04259-292271 ஆகிய அலுவலகங்களை அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


