HomeBlogPM KISAN திட்டம் - வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்

PM KISAN திட்டம் – வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்

PM KISAN Scheme – Linking of Aadhaar Number with Bank Account is required

TAMIL MIXER
EDUCATION.
ன்
PM KISAN
செய்திகள்

PM KISAN திட்டம்வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை PM KISAN பயனாளிகளுக்கு
13
வது
தவணை
தொகை
விடுவிப்புக்கு
வங்கி
கணக்குடன்
ஆதார்
எண்
இணைப்பது
அவசியம்
என
கூறியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

PM KISAN திட்டத்தின் கீழ் இணைந்த பயனாளிகளுக்கு
இதுவரை
12
தவணைகள்
வழங்கப்பட்டுள்ளது.
தற்போது
டிசம்பர்
2022
முதல்
மார்ச்
2023
வரையிலான
காலத்திற்கு
13
வது
தவணைத்
தொகையை
ஜனவரி
மாத
இறுதியில்
விடுவிப்பதற்காக
மத்திய
அரசு
ஆயத்த
பணிகளை
மேற்கொள்ளுமாறு
மாநில
அரசுகளுக்கு
அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்நிலையில் PM KISAN வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து வங்கி கணக்கு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு
மட்டுமே
இந்தத்
தொகை
வழங்கப்படும்
என
மத்திய
அரசு
உறுதியாக
கூறியுள்ளது.

தமிழ் தமிழ்நாட்டில்
இந்த
திட்டத்தின்
கீழ்
பயன்
பெற்ற
பயனாளிகளில்
8,84,120
பயனாளிகள்
இதுவரை
தங்களது
ஆதார்
எண்ணை
உறுதி
செய்யாமல்
இருந்தனர்.

அதனால் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகளும் தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வேளாண் வேளாண்மை உழவர் நலத்துறையானது,
அஞ்சல்
துறை
மற்றும்
பொது
சேவை
மையத்துடன்
இணைந்து
கிராமம்
வாரியாக
சிறப்பு
முகாம்களை
நடத்தி
ஒவ்வொரு
வீட்டிற்கும்
சென்று
ஆதார்
எண்ணை
உறுதி
செய்வது
அவசியம்
பற்றி
அறிவுறுத்தப்பட்டது.

மேலும் நாளிதழ்களில்
தொடர்ந்து
செய்திகள்
வெளியிடப்பட்டது.
இந்த
நடவடிக்கையின்
விளைவாக
இதுவரை
5,27,934
தகுதியான
பயனாளிகள்
ஆதார்
எண்
உறுதி
செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 3,56,186 தகுதியான பயனாளிகளுக்கும்
ஆதார்
எண்ணை
உறுதி
செய்திடும்
பணி
வேளாண்மை
உழவர்
நலத்துறை
அலுவலர்கள்
மூலம்
தொடர்ந்து
மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள
பி.எம் கிசான் திட்டத்தில் தமிழ்நாட்டு விவசாயிகள் அதிக எண்ணிக்கையில்
பயன்பெற
வேண்டும்
என்பதற்காக
வேளாண்மை
உழவர்
நலத்துறை
எடுத்து
வரும்
இந்த
முயற்சிக்கு
இந்த
திட்டத்தின்
பயனாளிகள்
முழு
ஒத்துழைப்பு
வழங்க
வேண்டும்
என
அரசு
கேட்டுக்கொள்கின்றது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!