TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய சீர் மரபினர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை என்ற திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயில்வராக இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இந்த தகுதி உடையவர்கள் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தேசிய தேர்வு முகமை நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
இந்த தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


