பெரம்பலூா் அருகே செங்குணம் பிரிவு சாலை எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் வெண் பன்றி வளா்ப்பு இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஜூலை 13) நடைபெறுகிறது.
இதில், வெண் பன்றி வளா்ப்பு, அவற்றின் இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரிலோ அல்லது 9385307022 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.